டெக்சஸ் வெள்ளம் - பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்ட டிரம்ப்
வாசிப்புநேரம் -
(படம்: CHIP SOMODEVILLA / GETTY IMAGES NORTH AMERICA / AFP)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) டெக்சஸ் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிட்டுள்ளார்.
மீட்புப்பணிகளில் மாநில, உள்ளூர் அதிகாரிகளின் முயற்சிகளை அவர் பாராட்டினார்.
அவர்கள் குடியிருப்பாளர்களுக்குப் போதுமான எச்சரிக்கை விடுக்கவில்லை என்ற குறைகூறலுக்கு இடையே அவரது பாராட்டு வந்துள்ளது.
அரசாங்க ஊழியர்களின் எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைக்கும் முயற்சியில் திரு டிரம்ப் மத்திய அரசாங்க அவசரநிலை நிர்வாக அமைப்பைக் கலைக்கப்போவதாக மீண்டும் மீண்டும் கூறியுள்ளார்.
தேடல் பணி தொடர்கிறது, மீட்புப்பணியாளர்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இம்மாதம் 4ஆம் தேதி நேர்ந்த பேரிடரில் குறைந்தது 129 பேர் மாண்டனர். 170க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை.

ஆதாரம் : AP