தாய்லந்து: விமானச் சேவைகள் குறைந்தன, பயணப்பெட்டிகள் குவிந்தன
வாசிப்புநேரம் -
படம்: Reuters/Athit Perawongmetha
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தாய்லந்து தலைநகர் பேங்காக்கில் ஏற்பட்ட வெள்ளத்தால் தாய் ஏர்வேஸ் (Thai Airways) நிறுவனம் சில விமானச் சேவைகளை ரத்துச் செய்திருக்கிறது.
சுமார் 30 விமானச் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன என்று நிறுவனம் நேற்று அறிவித்தது.
குறைந்தது மூன்று நாளுக்கு விமானச் சேவைகள் குறைக்கப்படும் என்று நிறுவனம் சொன்னது.
சிங்கப்பூர் - பேங்காக் இடையிலான விமானச் சேவையும் ரத்துச்செய்யப்பட்டது.
பேங்காக்கில் கடந்த வாரம் அடைமழை கொட்டித் தீர்த்தது.
வெள்ளம் ஏற்பட்டபோதும் வார இறுதியில் பேங்காக்கின் முக்கிய விமான நிலையங்கள் தொடர்ந்து இயங்கின.
ஆனால் சுவர்ணபூமி (Suvarnabhumi) விமான நிலையத்தில் பயணப்பெட்டிகளைக் கையாள்வதில் சிக்கல் ஏற்பட்டது.
நிலைமையைச் சமாளிக்கத் தாய்லந்து விமானப்படையைச் சேர்ந்த 69 பேர் உதவி கரம் நீட்டினர்.
தாய் ஏர்வேஸ் விமானப் பயணிகளுக்குச் சொந்தமான சுமார் 5,600 பயணப்பெட்டிகள் விமான நிலையத்தில் குவிந்தன.
3 நாளுக்குள் பயணப்பெட்டிகள் அங்கிருந்து அப்புறப்படுத்தப்படும் என்று நிறுவனத்தின் தலைமை நிர்வாகி நேற்று தெரிவித்தார்.
வெள்ளத்தால் தாய்லந்து முழுவதும் சுமார் $320 மில்லியன் டாலர் (சுமார் 409 மில்லியன் வெள்ளி) பொருளாதாரச் சேதம் ஏற்பட்டதாக மதிப்பிடப்படுகிறது.

ஆதாரம் : Reuters