கணவன் மனைவி சண்டை - தடுக்கச் சென்ற ஆடவர் மரணம்
வாசிப்புநேரம் -
படம்: envato.com
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
தாய்லந்தில் கணவன் மனைவி சண்டையைத் தடுக்கச் சென்ற ஆடவர் கத்திக்குத்துக்கு ஆளாகி மாண்டார்.
அவருக்கு வயது 27.
ஆடவரின் நெஞ்சில் இரண்டு முறை கத்தி இறங்கியது.
மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் அவர் மாண்டார்.
சம்பவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 5) காலையில் நடந்தது.
ஆடவர் வீட்டுக்கு அருகே உள்ள கடைக்குச் சென்றிருந்தார்.
எதிரில் இருக்கும் உணவகத்தில் தம்பதி வாக்குவாதம் செய்வதை அவர் கவனித்தார்.
பெண்ணின் பாதுகாப்பைக் கருதி அவர் சண்டையைத் தடுக்க எண்ணினார்.
அதனால் அந்தப் பெண்ணின் கணவருக்கும் அவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
ஒரு கட்டத்தில் ஆடவரும் தம்பதியும் விலகிச் சென்றனர்.
பின்னர் கைதொலைபேசியை மறந்து விட்டுச்சென்றதால் ஆடவர் கடைக்குத் திரும்பினார்.
அப்போது பெண்ணின் கணவர் ஆடவரைக் கத்தியால் குத்தியதாகச் சொல்லப்பட்டது.
சம்பவ இடத்தில் இருந்து தப்பிச் சென்ற கணவர் பின்னர் காவல்துறையிடம் சரணடைந்தார்.
அவருக்கு வயது 58.
அவர் அடிக்கடி பிறருடன் சண்டையிடுவார் என்று கூறப்பட்டது.

ஆதாரம் : Others