சிங்கப்பூருக்கு வர ஆசைப்பட்ட தாத்தா - 2,000 கிலோமீட்டர் கடந்து அழைத்துவந்த பேரன்
வாசிப்புநேரம் -
(படம்: Instagram/@kollawat_2626)
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
சிங்கப்பூரைப் பார்க்கவேண்டும் என்பது தாத்தாவின் ஆசை.
அதை நிறைவேற்றத் தாத்தாவை அழைத்துக்கொண்டு சுமார் 2,000 கிலோமீட்டர் பயணம் செய்துள்ளார் தாய்லந்தைச் சேர்ந்த 16 வயது இளையர் கியூ (Queue).
அதைப்பற்றி Instagramஇல் பகிர்ந்தார்.
வசதிகுறைந்த குடும்பத்தைச் சேர்ந்த கியூ தாத்தாவை முதல்முறையாகச் சிங்கப்பூருக்கு அழைத்து வந்ததாகக் குறிப்பிட்டார்.
காணொளிக்கு 760,000க்கும் அதிகமான விருப்பக்குறிகள் கிடைத்துள்ளன.
தாத்தாவின் கனவை நிறைவேற்றிய கியூவை இணையவாசிகள் பாராட்டி வருகின்றனர்.
இருவரும் தாய்லந்திலிருந்து மூன்றாம் வகுப்பு ரயிலில் மலேசிய எல்லைக்குப் பயணம் செய்தனர்.
பின்னர் மலேசியாவின் பாசிர் மாஸ் ரயில் நிலையத்திலிருந்து ஜொகூர் பாருவுக்குச் சென்றனர்.
அதற்கான ரயில் கட்டணம் ஆளுக்கு சுமார் 15 வெள்ளி.
அங்கிருந்து சுமார் 2 வெள்ளி பேருந்துக் கட்டணத்தில் சிங்கப்பூருக்கு வந்தனர்.
மரினா பே பகுதிக்குச் சென்ற இருவரும் மெர்லயன் சிலைக்கு முன்னால் படமெடுத்துக்கொண்டனர்.
செலவைக் குறைக்கச் சிங்கப்பூரில் தங்காமல் ஜொகூர் பாருவுக்குத் திரும்பினர்.
தாத்தாவுடனான இனிய நினைவுகளைப் பாதுகாக்கவே காணொளியைப் பகிர்ந்ததாகக் கியூ கூறினார்.
அதற்கு இவ்வளவு வரவேற்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்றார்.

ஆதாரம் : Others