Skip to main content
நகைக்கடையில் கொள்ளை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

நகைக்கடையில் கொள்ளை - 15 வயது இளையர் கைது

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

நகைக்கடைக் கொள்ளை தொடர்பில் 15 வயது இளையர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சம்பவம் தாய்லந்தின் ஹட் யாய் (Hat Yai) நகரில் நடந்தது.

நேற்று முன்தினம் (3 பிப்ரவரி) 2.43 மில்லியன் பாட் (சுமார் 97,000 வெள்ளி) மதிப்புள்ள தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது.

சந்தேக நபர் நகைக்கடை நிர்வாகிக்கு மிரட்டல் ஏதும் விடுக்காமல் 33 ஆபரணங்களைத் திருடியதாகச் சொல்லப்படுகிறது.

ஓர் ஆபரணம், தலைக்கவசம், காலணி ஆகியவை நகைக்கடை உள்ள கடைத்தொகுதியின் கார் நிறுத்துமிடத்தில் கண்டுபிடிக்கப்பட்டன.

இளையர் அவரசமாகத் தப்பியோடியபோது ஆபரணம் நழுவியதாகப் பாதுகாவல் அதிகாரி கூறினார்.

அவர் திருடப்பட்ட மோட்டார்சைக்கிளில் சென்றதாகத் தெரிகிறது.

கண்காணிப்புக் கேமரா பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்களுடன் சந்தேக நபர் அடையாளங்காணப்பட்டார்.

இளையர் தங்கத்தைத் தமது நண்பரிடம் கொடுத்துவிட்டு மற்றொரு நகருக்குச் செல்லத் திட்டமிட்டார்.

காவல்துறை அதிகாரிகள் நேற்று மாலை இளையரைப் பேருந்து முனையத்தில் கைது செய்தனர்.

ஆதாரம் : Bangkok Post

மேலும் செய்திகள் கட்டுரைகள்