தாய்லந்தில் புதிய சட்டம் - நள்ளிரவுக்குப் பின்னர் மது அருந்தினால் அபராதம்
வாசிப்புநேரம் -
தாய்லந்தில் மதுப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த புதிய சட்டம் அறிமுகமாகியிருக்கிறது.
நள்ளிரவுக்குப் பின்னர் மதுபானங்களை அருந்தினால் 10,000 தாய்லந்து பாட் (சுமார் 400 வெள்ளி) அபராதம் விதிக்கப்படும்.
செய்தியை உள்ளூர் ஊடகம் அறிவித்தது.
உரிமம் உள்ள கடைகளிலிருந்து மக்கள் மதுபானங்களை வாங்கி அருந்துவதைக் கட்டுப்படுத்த சட்டம் உருவாக்கப்பட்டது.
முன்பிருந்த சட்டம் மது விற்பனையைக் கட்டுப்படுத்தியது. மதுபோதையில் இருப்பவர்கள், இளம் வயதினர் ஆகியோருக்கு மது விற்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இப்போது மது அருந்துவதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கின்றன.
நள்ளிரவிலிருந்து காலை 11 மணிவரையும், மதியம் 2 மணியிலிருந்து மாலை 5 மணிவரையும் மது வாங்கி அருந்தக்கூடாது என்று புதிய சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இந்தச் சட்டம் அறிவிக்கப்பட்ட பின்னர் சர்ச்சையும் தொடங்கியது.
குறிப்பாக, விருந்தோம்பல் துறை மீது பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று பலர் குறைகூறியுள்ளனர்.

ஆதாரம் : Others