Skip to main content
தாய்லந்தில் பேருந்து
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தாய்லந்தில் பேருந்து-ரயில் விபத்து: ரயில் ஓட்டுநர் போதைப்பொருளை உட்கொண்டிருந்தார்

வாசிப்புநேரம் -

தாய்லந்தில் பேருந்து மீது மோதிய ரயிலின் ஓட்டுநர் போதைப்பொருளை உட்கொண்டிருந்தாகத்  தெரியவந்துள்ளது.

கவனக்குறைவாக ரயிலை ஓட்டியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.

சனிக்கிழமை நேர்ந்த சம்பவத்தில் எட்டுப் பேர் மாண்டனர்.

சுமார் 30 பேர் காயமுற்றனர்.

ரயில் ஓட்டுநரிடம் செல்லுபடியான  உரிமம் இல்லை என்று ரயில் போக்குவரத்துத் தலைவர் கூறினார்.

ஓட்டுநர் வேலையிலிருந்து தற்காலிகமாய் நீக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

ரயில் ஊழியர்கள் அனைவருக்கும் மதுபான, போதைப்பொருள் சோதனைகளை நடத்தும்படி ரயில் போக்குவரத்துத்துறை உத்தரவிட்டிருக்கிறது.

ரயிலை ஓட்டுவதற்கு அனுமதியளித்த மேற்பார்வையாளர்கள் மீதும் விசாரணை தொடங்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்