மியன்மார் எல்லையருகே மின்சார விநியோகத்தைத் துண்டித்த தாய்லந்து
வாசிப்புநேரம் -

(கோப்புப் படம்: AFP/Manan Vatsyayana)
மியன்மார் எல்லையருகே உள்ள 5 பகுதிகளுக்கு தாய்லந்து மின்சார விநியோகத்தைத் துண்டித்துள்ளது.
மியன்மார் எல்லையில் அதிகரித்துள்ள மோசடி நிலையங்களை முடக்க தாய்லந்து அவ்வாறு செய்துள்ளதாய் Reuters செய்தி நிறுவனம் தெரிவித்தது.
மியன்மாரில் உள்ள அந்த 5 பகுதிகளுக்கு மாதம்தோறும் மின்சாரம் விநியோகிப்பதன் மூலம் தாய்லந்திற்குச் சுமார் 50 மில்லியன் பாட் (2 மில்லியன் வெள்ளி) வருமானம் கிடைப்பதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும் பில்லியன் கணக்கில் வருமானம் ஈட்டுவதாகச் சொல்லப்படும் மோசடி நிலையங்களை முடக்க அந்த நடவடிக்கை அவசியம் என்று அரசாங்கம் தெரிவித்தது.
சீனாவைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கடத்திச் செல்லப்பட்டு அந்த மோசடி நிலையங்களில் வேலை செய்ய வைப்பதாகக் கூறப்படுகிறது.
அதனால் சீனப்புத்தாண்டு விடுமுறையின்போது சீனாவிலிருந்து தாய்லந்து சென்ற சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக Reuters செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

ஆதாரம் : Reuters