Skip to main content
தாய்லந்தில் 11 பெட்ரோல் நிலையங்களில் தாக்குதல்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தாய்லந்தில் 11 பெட்ரோல் நிலையங்களில் தாக்குதல்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தாய்லந்தின் தென் பகுதியிலிருக்கும் 11 பெட்ரோல் நிலையங்களில் குண்டுவெடிப்புத் தாக்குதல் நடந்துள்ளது.

நராட்டிவாட் (Narathiwat), பட்டானி (Pattani), யாலா (Yala) ஆகிய மாநிலங்களில் இன்று விடிகாலையில் தாக்குதல் நடந்ததாகத் தாய்லந்து ராணுவப் பேச்சாளர் கூறினார்.

நள்ளிரவுக்குப் பிறகு 40 நிமிடங்களில் அனைத்துக் குண்டுகளும் வெடித்தன.

நால்வர் காயமடைந்தனர்.

தாய்லந்தின் தென் பகுதி மலேசியாவுக்கு மிகவும் அருகில் இருக்கிறது. அங்கு வசிக்கும் பெரும்பாலானோர் முஸ்லிம்கள்.

2004ஆம் ஆண்டிலிருந்து அங்கு தன்னாட்சியை விரும்பும் கிளர்ச்சிப் பிரிவுகள் செயல்பட்டுவருகின்றன.

யார் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என்ற தகவலை அதிகாரிகள் வெளியிடவில்லை.

ஒரே நேரத்தில் தாக்குதல்கள் நடந்ததாக நராட்டிவாட் மாநில ஆளுநர் செய்தியாளர்களிடம் கூறினார்.

அங்கு காவல்துறை அதிகாரி ஒருவர் காயமடைந்ததை அவர் உறுதி செய்தார்.

பட்டானி மாநிலத்தில் தீயணைப்பாளரும் பெட்ரோல் நிலைய ஊழியர்கள் இருவரும் காயமடைந்தனர்.

தாக்குதல்கள் வரவிருக்கும் தேர்தலைப் பாதிக்கவே நடத்தப்பட்டதாகப் பாதுகாப்பு அதிகாரிகள் கருதுகின்றனர்.

ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்