தாய்லந்தில் வெள்ளம் - 9 பேர் மாண்டனர்
வாசிப்புநேரம் -
தென் தாய்லந்தில் கனத்த மழை கொண்டுவந்த வெள்ளத்தில் 9 பேர் மாண்டனர்.
13,000க்கும் அதிகமானோர் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
வெள்ளத்தில் சிக்கியிருப்போரை மீட்க படகுகள் பயன்படுத்தப்படுகின்றன.
நெஞ்சளவுக்கு ஏறியுள்ள வெள்ள நீரை மக்கள் கடந்துசெல்லும் காட்சிகளை உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. சில இடங்களில் வாகனங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
மொத்தம் 8 மாநிலங்களில் வெள்ளம் ஏறியிருக்கிறது. இதனால் 553,921 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தாய்லந்துப் பேரிடர் நிர்வாக அமைப்பு Facebookஇல் பதிவிட்டுள்ளது.
சொங்லா (Songkhla) மாநிலத்தில் உணவுத் தட்டுப்பாடு பற்றிய கவலை எழுந்துள்ளது.
அதற்குப் பக்கத்தில் உள்ள பட்டானி (Pattani) மாநிலத்தில் 2 மருத்துவமனைகளில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.
அடுத்த வாரம் வரை கனமழை நீடிக்கலாம் என்று தாய்லந்து வானிலை ஆய்வகம் முன்னுரைத்துள்ளது.

ஆதாரம் : AFP