Skip to main content
தாய்லந்தில் வாக்களிப்பு
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தாய்லந்தில் வாக்களிப்பு

வாசிப்புநேரம் -
தாய்லந்தில் வாக்களிப்பு
படம்: CNA/Zamzahuri Abas
வெளியீடு : 08 Feb 2026 09:58AM புதுப்பிப்பு : 08 Feb 2026 01:54PM
தாய்லந்தில் பொதுத்தேர்தல் நடைபெறுகிறது.

தாய்லந்தின் வரலாற்றில் முதன்முறையாக புதிய அரசமைப்புச் சட்டத்தை அமைப்பது குறித்தும் மக்கள் வாக்களிக்கின்றனர்.

அது 2017ஆம் ஆண்டு ராணுவ ஆட்சியின் கீழ் வரையப்பட்ட அரசமைப்புச் சட்டத்திற்குப் பதிலாகப் புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கும் அதிகாரத்தைத் தேர்ந்தெடுக்கப்படும் அரசாங்கத்திற்கு வழங்கும்.

பிரதமர் அனுட்டின் சார்ன்விராக்குவினின் (Anutin Charnvirakun) -இன் Bhumjaithai கட்சி, மக்கள் கட்சி, Pheu Tai கட்சி ஆகியவற்றுக்கு இடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்தது 50 மில்லியன் பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

அவர்களில் 2.3 மில்லியன் பேர் முதன்முறை வாக்களிக்கவிருக்கின்றனர்.

100,000 வாக்களிப்பு மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு தாய்லந்து நேரப்படி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.
 

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்