Skip to main content
தாய்லந்தில் மின்னல் தாக்கி காற்பந்து வீரர் மரணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தாய்லந்தில் மின்னல் தாக்கி காற்பந்து வீரர் மரணம்

வாசிப்புநேரம் -
தாய்லந்தில் மின்னல் தாக்கி காற்பந்து வீரர் மரணம்

(படம்: Facebook/Abdul Basir Chepor)

வெளியீடு : 05 Aug 2026 05:13PM புதுப்பிப்பு : 05 Aug 2026 08:40PM
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

தாய்லந்தில் காற்பந்து ஆட்டத்தின்போது மின்னல் தாக்கியதில் ஒரு வீரர் மாண்டார்.

மலேசிய வீரர் ஒருவர் உட்பட 12 பேர் காயமுற்றனர்.

தாய்லந்தின் தெற்கேயுள்ள சுங்காய் கொலோக் (Sungai Golok) என்ற ஊரில் அந்தச் சம்பவம் நடந்தது.

வட்டார அளவிலான Golok FA Cup அரையிறுதிப் போட்டியின்போது மாலை சுமார் 5.30 மணிக்கு மின்னல் தாக்கியது என்று அப்பகுதி காவல்துறை தலைவர் கூறினார்.

அப்போது கனத்த மழை பெய்தது.

Abu x Nong Sirin, SAMCOLT ஆகிய இரு அணிகளும் பொருதின.

அணியில் மலேசிய வீரர்கள் சிலரும் இருந்தனர்.

மாண்டவர் 24 வயது சொஃப்வான் ஆவே (Sofwan Awae) என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் Abu x Nong Sirin அணியைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.

சில நாளுக்கு முன்புதான் அவர் யாலா (Yala) காற்பந்துக் குழுவில் சேர்ந்தார்.

அவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

கடுமையான காயங்களால் உயிரிழந்தார்.

அவரது மறைவுக்கு யாலா குழுவும் தாய்லந்தின் காற்பந்து அமைப்பும் அனுதாபம் தெரிவித்துள்ளன.
ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்