சென்ற ஆண்டு தாய்லந்துக்கு எத்தனை சுற்றுப்பயணிகள் சென்றனர் தெரியுமா?

(கோப்புப் படம்: REUTERS/Jorge Silva)
சென்ற ஆண்டு (2024) தாய்லந்துக்கு 35 மில்லியனுக்கும் அதிகமான அனைத்துலக சுற்றுப்பயணிகள் சென்றிருந்ததாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
COVID நோய்த்தொற்று, சுற்றுப்பயணிகளின் மாறிவரும் விருப்பங்கள் ஆகியவற்றின் காரணமாக தாய்லந்தின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருந்தது.
2019இல் நோய்த்தொற்று காலத்துக்கு முன்பு சுமார் 40 மில்லியன் பயணிகள் தாய்லந்துக்குச் சென்றிருந்ததாக அந்நாட்டின் விளையாட்டு, சுற்றுப்பயண அமைச்சு தெரிவித்தது.
அங்கு ஆக அதிகமாகச் சென்ற பயணிகள் சீனாவைச் சேர்ந்தவர்கள். 6 மில்லியனுக்கும் அதிகமான சீனப் பயணிகள் சென்ற ஆண்டு தாய்லந்துக்குச் சென்றிருந்தனர்.
மலேசியா, இந்தியாவைச் சேர்ந்த பயணிகளும் தாய்லந்துக்கு அதிகமாகச் சென்றிருந்தனர்.
இவ்வாண்டு 39 மில்லியன் சுற்றுப்பயணிகள் தாய்லந்துக்குச் செல்வர் என்று அந்நாடு எதிர்பார்க்கிறது.