Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

தாய்லந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாட் சிறையிலிருந்து விடுதலை

வாசிப்புநேரம் -
தாய்லந்து முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாட் சிறையிலிருந்து விடுதலை

படம்: Reuters/Athit Perawongmetha

வெளியீடு : 11 May 2026 10:31AM புதுப்பிப்பு : 11 May 2026 11:14AM

தாய்லந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவாட்  (Thaksin Shinawatra) முன்கூட்டியே சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டிருக்கிறார்.

ஊழல் குற்றங்களுக்காக 76 வயது தக்சினுக்குச் சென்ற செப்டம்பர் மாதம் ஓராண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிங்கப்பூர் நேரப்படி இன்று காலை 8.40 மணியளவில் அவர் சிறையிலிருந்து வெளியேறினார்.

தக்சினை அவரது குடும்பத்தாரும் பியூ தாய்(Pheu Thai) கட்சி ஆதரவாளர்களும் வரவேற்றனர்.

நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் அங்கு திரண்டிருந்தனர். சிலர் "we love Thaksin" என்று முழக்கமிட்டதாக AFP ஊடகம் சொன்னது.

அவர்களைப் பார்த்து புன்னகைத்தவாறு கையசைத்த தக்சின் நிருபர்களிடம் பேசாமல் காரில் ஏறி அங்கிருந்து புறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

வயது, ஓராண்டுக்குக் குறைவான தண்டனைக் காலம் ஆகிய காரணங்களைக் கருத்தில் கொண்டு தக்சின் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.

அவருடைய தண்டனைக்காலம் செப்டம்பர் மாதம் நிறைவடைகிறது.

அதுவரையில் அவர் கண்காணிப்புக் கருவியை அணியவேண்டும்.

ஆதாரம் : AGENCIES

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்