மலேசியாவில் ஆயுதமேந்திக் கொள்ளையடித்த மூன்றாம் நபர் - காவல்துறை சுட்டுக்கொன்றது
வாசிப்புநேரம் -

(படம்: CNA/Fadza Ishak)
மலேசியாவில் ஆயுதமேந்திக் கொள்ளை அடித்ததாகச் சந்தேகிக்கப்பட்ட மூன்றாவது நபர் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். அவருக்கு வயது 34.
பாண்டார் புத்ரி ஜெயாவில் (Bandar Puteri Jaya) காவல்துறை அவரைச் சுட்டது.
ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புள்ளதாக நம்பப்படும் மற்ற இருவர் கொல்லப்பட்ட சில மணி நேரத்துக்குப் பின்னர் மூன்றாவது நபர் கொல்லப்பட்டார். அந்த இருவரும் ஜித்ரா (Jitra) எனும் நகரில் காவல்துறை துப்பாக்கியால் சுட்டதில் உயிரிழந்தனர்.
பேராக்கைச் (Perak) சேர்ந்த அந்த மூன்றாவது நபர் மலேசியாவின் 4 மாநிலங்களில் ஆயுதமேந்திய கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக New Straits Times நாளேடு தெரிவித்தது. அவர் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்தவர் என்றும் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறையினர் ஆடவரைக் கைது செய்ய முயன்றபோது அவர் எதிர்த்ததால் துப்பாக்கியால் அவரைச் சுட நேரிட்டதாக மலேசியக் காவல்துறை தெரிவித்தது.
சந்தேக நபரின் உடைமையில் துப்பாக்கி இருந்ததாகக் காவல்துறை சொன்னது. இதற்குமுன் அவர் 30க்கும் அதிகமான குற்றச்செயல்களில் ஈடுபட்டதாகவும் அதிகாரிகள் கூறினர்.

ஆதாரம் : AGENCIES