ஆடவரை விழுங்கிவிட்டு அவரைத் துப்பிய திமிங்கிலம்
வாசிப்புநேரம் -

pixabay
தென் அமெரிக்க நாடான சிலியில் ஒரு வினோதச் சம்பவம்.
ஒரு திமிங்கிலம் விழுங்க முயன்ற ஆடவர் பிழைத்துக்கொண்டார்.
புந்தா அரினாஸ் (Punta Arenas) நகரில் அவர் கயாக் (Kayak) படகோட்டிக்கொண்டிருந்தார்.
திடீரெனக் கடலிலில் ஒரு ராட்சதத் திமிங்கிலம் அவரை நெருங்கியது.
கண் மூடித் திறப்பதற்குள் திமிங்கிலம் அவரைக் கவ்வியது..படகும் அதன் வாய்க்குள் சென்றது.
சில நொடிகளில்..ஆடவர் மீண்டும் வெளிச்சத்தைக் கண்டார்.
திமிங்கிலம் அவரை வெளியே துப்பிவிட்டது.
என்ன நடந்தது என்பதை உணர்வதற்குள் ஆடவரின் தந்தை உதவிக்கு வந்தார்.
"படகைப் பிடி...அது கவிழ்வதைத் தவிர்க்கப் படகைப் பிடி!" என்று தந்தை மீண்டும் மீண்டும் கூறினார்.
திமிங்கிலம் விலகிச் சென்றதும் தந்தையும் மகனும் மீண்டும் கரைக்குத் திரும்பினர்.
திமிங்கிலத்தின் தொண்டை சிறிதாய் இருப்பதால் அது ஆடவரை முழுமையாக விழுங்கியிருக்கச் சாத்தியம் இல்லை என்று நிபுணர்கள் கூறினர்.
திமிங்கிலம் வழக்கமாக இரை தேடும் இடத்தில் அவர் இருந்திருக்கலாம் என்றும் தவறுதலாகத் திமிங்கிலம் அவரை விழுங்கியிருக்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆதாரம் : AFP