Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

அமெரிக்காவில் பனிப்புயல் - 3,000க்கும் அதிகமான விமானப் பயணங்கள் ரத்து

வாசிப்புநேரம் -
அமெரிக்காவின் தென் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள பனிப்புயல் காரணமாக
3,000க்கும் அதிகமான விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.

FlightAware எனும் விமானப் பயணங்களைக் கண்காணிக்கும் இணையத்தளம் அத்தகவலை வெளியிட்டது.

இம்முறை குளிர்காலம் எதிர்பாராத அளவுக்குச் சிக்கல்களை ஏற்படுத்தியிருப்பதாக Delta Airlines கூறியது.
இதனால் அட்லாண்ட்டா (Atlanta) விமான நிலையத்திலுள்ள 5 ஓடுபாதைகளும் 2 மணி நேரத்துக்கும் மேல் மூடப்பட்டுள்ளன.

Delta Airlines விமானம் ஒன்றில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டதால் விமானத்தின் புறப்பாடு ரத்துச் செய்யப்பட்டது.

Dallas Fort Worth, Charlotte Douglas ஆகியவையும் மோசமான வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. அந்த 2 விமான நிலையங்களிலும் 1,200க்கும் அதிகமான விமானப் பயணங்கள் ரத்துச் செய்யப்பட்டுள்ளன.
 
ஆதாரம் : AFP

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்