Skip to main content
72 மணி நேரத்தில் 40 நிலநடுக்கங்கள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

72 மணி நேரத்தில் 40 நிலநடுக்கங்கள் - கிரீஸின் சன்ட்டோரினியில் பீதி

வாசிப்புநேரம் -
கிரீஸீன் சன்ட்டோரினித் (Santorini) தீவை நிலநடுக்கங்கள் உலுக்கியதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கானோர் அங்கிருந்து வெளியேறுகின்றனர்.

கடல், ஆகாயம் வழி மக்கள் மூன்றாவது நாளாகத் தீவிலிருந்து வெளியேறுகின்றனர்.

தற்போது சுமார் 6,000 பேர் தீவைவிட்டுக் கிளம்பிவிட்டனர்.

சென்ற வாரம் முதல் நூற்றுக்கணக்கான நில அதிர்வுகள் தீவில் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இன்று காலை சிறிய நில அதிர்வுகளுக்கு இடையில் 4.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அதனால் சன்ட்டோரினியிலும் அண்டைத் தீவுகளிலும் யாருக்கும் காயம் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை.

இதுபோன்ற சூழல் இதுவரை அங்கு ஏற்பட்டதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அது எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதையும் அவர்களால் குறிப்பிட்டுச் சொல்ல முடியவில்லை.

கடந்த 72 மணி நேரத்தில் 4.0 ரிக்டருக்கும் அதிகமான அளவில் 40க்கும் அதிகமான நிலநடுக்கங்கள் தீவைப் புரட்டிப் போட்டுள்ளன.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்