அதிகாலை 5 மணி முதல் வரிசையில் நின்ற மக்கள்! ஏன் தெரியுமா?
வாசிப்புநேரம் -
படம்: Majlis Bandaraya Melaka Bersejarah/Facebook
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
மலேசியாவின் மலாக்கா நகரில் ஆயிரக்கணக்கானோர் வேலை வாய்ப்புக்காக வரிசையில் நின்ற காணொளிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படுகிறது.
அந்த வரிசை சுமார் 1 கிலோமீட்டர் தூரம் நீண்டது.
ஜெர்மனியின் Infineon Technologies நிறுவனம் வேலைக்கு ஆள் எடுப்பதாகத் தெரிவித்தது.
நேற்று முன்தினம் (14 ஜூன்) காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நேர்காணல் நடத்தப்பட்டது.
நிறுவனம் கிட்டத்தட்ட 400 பேரை வேலைக்குச் சேர்க்க எண்ணியது.
3,500 ரிங்கிட் (1107 சிங்கப்பூர் வெள்ளி) முதல் சம்பளம் தரப்படும் என்றும் கூறப்பட்டது.
வேலை தேடும் பலர் சென்றனர்.
பதிவுகள் தொடங்குவதற்கு முன்பே நிறைய பேர் அங்கு கூடினர்.
நேர்காணல் நடக்கும் இடத்தைச் சுற்றி இருக்கும் சாலைகளில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
சிலர் அதிகாலை 5 மணிக்கே வரிசையில் நிற்கத் தொடங்கினர்.
கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பலர் சில மணி நேரம் வரிசையில் நின்றனர்.
அதை பார்த்த இணையவாசிகள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.

ஆதாரம் : Others