தங்கியிருந்த வீட்டில் சண்டை - 3 பங்களாதேஷ் தொழிலாளர்கள் பலி
This audio is generated by an AI tool.
மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ஒரே வீட்டில் தங்கியிருந்த தொழிலாளர்களுக்கு இடையே நடந்த சண்டையில் மூவர் மாண்டனர்.
அவர்கள் பங்களாதேஷ் ஆடவர்கள் என்று NST ஊடகம் கூறுகிறது. படுகாயமடைந்த மேலும் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.
லிங்கி எனும் இடத்தில் உள்ள ஒரு வீட்டில் சம்பவம் நடந்தது.
வீட்டில் சண்டை நடந்ததாகப் பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் தந்தனர்.
லிங்கி காவல்துறை சம்பவ இடத்துக்குச் சென்று 40 வயதுடைய பங்களாதேஷ் ஆடவரைக் கைதுசெய்தது.
பின்னர் லிங்கியில் உள்ள தோட்டப் பகுதியிலிருந்து 2 சடலங்கள் மீட்கப்பட்டன.
சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் ஒரே வீட்டில் தங்கி, ஒன்றாக வேலை செய்தவர்கள் என்பது தொடக்க விசாரணையில் தெரியவந்துள்ளது.
விசாரணை தொடர்கிறது.