Skip to main content
கிறிஸ்துமஸ் கேக்கில் நஞ்சு?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

கிறிஸ்துமஸ் கேக்கில் நஞ்சு? - 3 பெண்கள் மரணம்

வாசிப்புநேரம் -
பிரேசிலில் ஒன்றுகூடல் நிகழ்வில் கிறிஸ்துமஸ் கேக் சாப்பிட்ட 6 பேரில் மூவர் மாண்டனர். 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அந்தக் கேக்கில் நஞ்சு கலக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது. மாண்ட மூவரும் பெண்கள். அவர்களில் ஒருவரின் ரத்தத்தில் arsenic ரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவரில் ஒருவர் அந்தக் கேக்கைத் தயாரித்த பெண். மற்றொருவர் 10 வயதுச் சிறுவன். அவர்களின் ரத்தத்திலும் அந்த ஆபத்தான ரசாயனம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் 5 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று BBC கூறியது.

காவல்துறை கேக்கைச் சோதனைக்கு அனுப்பியிருக்கிறது. அதன் முடிவு அடுத்த வாரம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கேக்கைத் தயாரித்த பெண்ணின் வீட்டில் காலாவதியான உணவுப் பொருள்களை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில் கேக்கைத் தயாரித்த பெண்ணின் கணவரது இறந்த உடலை மீண்டும் தோண்டி எடுத்துப் பிரேதப் பரிசோதனை நடத்த காவல்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

அவர் செப்டம்பர் மாதம் நச்சுணவால் மாண்டார். அப்போது அது இயற்கையான மரணம் என்று காவல்துறை கருதியது.

கிறிஸ்துமஸ் கேக்கை ஆறு பேர் சாப்பிட்டதாகக் காவல்துறை கூறியது. அவர்களில் கேக்கைத் தயாரித்த பெண்தான் அதிகம் சாப்பிட்டதாகவும் அவரின் உடலில்தான் arsenic ரசாயன அளவு அதிகம் இருந்தது என்றும் காவல்துறை தெரிவித்தது.

தூய்மையற்ற தண்ணீரில் arsenic ரசாயனம் இயற்கையாகவே இருக்கலாம் என்று உலகச் சுகாதார நிறுவனம் சொல்கிறது. அந்த அளவு கூடிப்போனால் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்று அது சொன்னது.

இது வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட நச்சுச் சம்பவமா என்பதைக் காவல்துறை இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

விசாரணை நடைபெறுகிறது.
 
ஆதாரம் : Others

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்