Skip to main content
ஜப்பானில் மருத்துவ அவசர விமானம் கடலில் விழுந்தது
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

ஜப்பானில் மருத்துவ அவசர விமானம் கடலில் விழுந்தது - 3 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
ஜப்பானில் மருத்துவ அவசர விமானம் கடலில் விழுந்தது - 3 பேர் மரணம்

(படம்: The 7th Regional Japan Coast Guard Headquarters via AP)

ஜப்பானின் தென் மேற்குப் பகுதியில் மருத்துவ அவசர விமானம் கடலில் விழுந்ததில் மூவர் மாண்டனர்.

மாண்டவர்களில் ஒருவர் 86 வயது நோயாளி. மேலும் இருவர் அவரின் பராமரிப்பாளரும் மருத்துவரும் ஆவர்.

நாகசாக்கி (Nagasaki) வட்டாரத்தில் உள்ள ஒரு தீவின் விமான நிலையத்திலிருந்து விமானம் புறப்பட்டது.

பத்தே நிமிடத்தில் விமான நிலையத்துடன் அது தொடர்புகளை இழந்தது.

ஃபுக்குவோக்காவில் (Fukuoka) உள்ள மருத்துவமனைக்குச் சென்றுகொண்டிருந்தது விமானம்.

அதிலிருந்த விமானி, தாதி, இயந்திர வல்லுநர் ஆகிய மூவரும் மீட்கப்பட்டனர்.

உயிர்க்காப்பு மிதவைகளைப் பிடித்துக்கொண்டிருந்த அவர்களைக் கடலோரக் காவற்படையினர் கண்டுபிடித்தனர்.

அவர்களின் உடல் வெப்பம் மிகக் குறைவாக இருந்தது.

ஜப்பானின் போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம் விபத்துக் குறித்து விசாரிக்கவிருக்கிறது.

மேலும் செய்திகள் கட்டுரைகள்