"தியெனான்மென் சதுக்கச் சம்பவத்தின் நினைவுகளை அழித்துவிட முடியாது"
(படம்: Anna Moneymaker / GETTY IMAGES NORTH AMERICA / AFP)
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்க்கோ ரூபியோ (Marco Rubio) சீனா, தியெனான்மென் சதுக்கச் சம்பவத்தின் நினைவுகளை அழித்துவிட முடியாது என்று கூறியிருக்கிறார்.
1989இல் அமைதியாக நடந்த போராட்டத்தைச் சீனா, ராணுவத்தைக் கொண்டு நசுக்கியது.
ஜூன் 4ஆம் தேதி நடந்த அந்தச் சம்பவத்தின் 37ஆவது ஆண்டு நிறைவில் திரு ரூபியோ பேசினார்.
சீன ராணுவ வீரர்கள் மக்களை நோக்கிச் சுட்டதில் நூற்றுக்கணக்கானோர் அல்லது ஆயிரக்கணக்கானோர் மாண்டதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன.
தணிக்கையால் கடந்த காலத்தை மறைத்துவிட முடியாது என்றார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர்.