Skip to main content
கோல்ஃப் வீரர் டைகர் ஊட்ஸுக்கு வாகனம் ஓட்ட ஐந்தாண்டுத் தடை
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கோல்ஃப் வீரர் டைகர் ஊட்ஸுக்கு வாகனம் ஓட்ட ஐந்தாண்டுத் தடை

வாசிப்புநேரம் -
கோல்ஃப் வீரர் டைகர் ஊட்ஸுக்கு வாகனம் ஓட்ட ஐந்தாண்டுத் தடை

படம்: Saul MARTINEZ /AFP

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

பிரபல கோல்ஃப் (golf) வீரர் டைகர் ஊட்ஸுக்கு (Tiger Woods) வாகனம் ஓட்ட ஐந்தாண்டுத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டிய குற்றத்தை அவர் ஒப்புக்கொண்டார்.

கடந்த மார்ச் மாதம் ஃபுளோரிடாவில் (Florida) நடந்த கார் விபத்தைத் தொடர்ந்து போதையில் வாகனம் ஓட்டியதாக அவர்மீது குற்றஞ்சாட்டப்பட்டது.

பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டியதாக ஒப்புக்கொண்டால் போதையில் ஓட்டிய குற்றச்சாட்டு கைவிடப்படும் என்று கூறப்பட்டது.

அதற்கு அவர் இணங்கினார்.

"தடைக்காலத்தின் போது எந்தக் காரணத்திற்காகவும் வாகனம் ஓட்டினால் உடனடியாக மீண்டும் சிறைக்குச் செல்வீர்கள்" என்று நேரலையில் ஒளிபரப்பப்பட்ட விசாரணையின்போது நீதிபதி, ஊட்ஸை எச்சரித்தார்.

மார்ச் 27ஆம் தேதி ஊட்ஸின் SUV கார் ஒரு லாரியுடன் மோதியது.

அவர் மது அருந்தவில்லை என்று விசாரணையில் தெரியவந்தது.

ஆனால் அவரிடம் opioid வகைப் போதைப்பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் சிறுநீர்ப் பரிசோதனைக்குச் செல்ல உத்தரவிடப்பட்டது. ஆனால் அதற்கு உடன்பட அவர் மறுத்துவிட்டார்.

அதனால், அவர் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

ஏப்ரல் மாதத்தில், ஊட்ஸ் கோல்ஃப் போட்டிகளிலிருந்து சில காலம் விலகியிருக்கப் போவதாக அறிவித்திருந்தார்.

சிகிச்சை பெறவுள்ளதாகவும் உடல்நலத்தில் கவனம் செலுத்தப்போவதாகவும் அவர் சொன்னார்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்