Skip to main content
கம்போடியக் காடுகளில் மீண்டும் புலிகளின் உறுமல்?
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

கம்போடியக் காடுகளில் மீண்டும் புலிகளின் உறுமல்?

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

கம்போடியாவில் புலிகளே இல்லை என்று பத்தாண்டுக்கு முன் அறிவிக்கப்பட்டது.

ஆனால் கம்போடிய வனப் பகுதிகளில் மீண்டும் புலிகளைப் பார்க்க வாய்ப்பு உள்ளதாக வனவிலங்குப் பாதுகாப்பு ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

அதற்காக இந்தியாவிலிருந்து சுமார் 3,600 புலிகள் தருவிக்கப்படும்.

கம்போடியாவின் கார்டமம் (Cardamom) மலை அவற்றின் புதிய வசிப்பிடமாக இருக்கும்.

ஒரு மில்லியன் ஹெக்டருக்கும் மேல் பரப்பளவுள்ளது அந்த பாதுகாக்கப்பட்ட மழைக்காடு.

புலிகளை மீண்டும் தருவிப்பதால் கம்போடிய நிலவனப்பின் பாதுகாப்பு மேம்படலாம்.

சுற்றுப்பயணமும் வலுப்பெறலாம் என்று கூறப்பட்டது.

ஆபத்துகளும் உள்ளன.

வேட்டையாடியதால் நாட்டின் வனவிலங்கு பெரிதும் அழிந்துவிட்டது.

அதனால் புதிதாகத் தருவிக்கப்படும் புலிகளுக்குப் போதுமான இரை கிடைக்குமா என்பது ஒரு கேள்வி.

காடுகள் அழிக்கப்படுவதில் புலிகள் வசிக்கவிருக்கும் இடமும் விட்டுவைக்கப்படவில்லை.

தங்களிடம் கருத்துக் கேட்கப்படவில்லை என்று அந்தப் பகுதியில் வசிப்போர் கூறுகின்றனர்.

புலிகளைத் தருவிக்கும் பணி ஈராண்டிற்கு முன்பே தொடங்கியிருக்கவேண்டும்.

ஆனால் வசிப்பிடம் பற்றிய அக்கறை, நிதியுதவித் திட்டத்தில் பிரச்சினை உள்ளிட்ட காரணங்களால் அது தள்ளிப்போனது.

மே மாதம் புதிய திட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

அதன்படி அடுத்த ஆண்டிலிருந்து புலிகள் தருவிக்கப்படலாம்.
ஆதாரம் : AFP

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்