Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Beauty Filters அம்சங்களை இளையர்கள் விரைவில் TikTok-இல் பயன்படுத்த முடியாது

வாசிப்புநேரம் -

இளையர்கள் விரைவில் TikTok செயலியில் அழகைக் கூட்டும் அம்சங்களைப் (beauty filters) பயன்படுத்தத் தடை விதிக்கப்படும்.

TikTok அனைத்துலக அளவில் அந்தக் கொள்கையை நடைமுறைப்படுத்தவிருக்கிறது.

18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் அந்த அம்சங்களைப் பயன்படுத்தத் தடை செய்யப்படும்.

அந்த மாற்றம் அடுத்த ஒருசில வாரங்களில் செயல்படுத்தப்படும் என்று TikTok குறிப்பிட்டது.

தடை செய்யப்படுவதோடு அழகைக் கூட்டும் அம்சங்களைப் பயன்படுத்தினால் அது ஒருவரின் தோற்றத்தை எவ்வாறு மாற்றுகிறது என்பதற்கான தகவலும் வழங்கப்படும் என்று TikTok தெரிவித்தது.

அந்த அம்சங்கள் சில நேரங்களில் விரும்பத்தகாத பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்ற புரிதலையும் விழிப்புணர்வையும் அவற்றை உருவாக்குவோரிடையே ஏற்படுத்தத் தளம் முனைகிறது.

ஆதாரம் : CNA

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்