Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

5 மணி நேரம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களால் கடுமையாகச் சாடப்பட்ட TikTok நிறுவனர்

வாசிப்புநேரம் -

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரபல சமூக ஊடகத் தளமான Tik Tokஇன் நிறுவனரைக் கடுமையாகச் சாடியுள்ளனர்.

TikTok நிறுவனர் சியூ ஷோ சி-இடம்  (Chew Shou Zi)  ஏறக்குறைய 5 மணி நேரத்துக்குக் காரசாரமான கேள்விகள் எழுப்பப்பட்டன.

சீனாவுக்குச் சொந்தமான அந்தச் செயலி சீனாவிலிருந்து பிரிந்து தனியாகச் செயல்படவேண்டும் அல்லது தடை செய்யப்படவேண்டும் என்று ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் ஒருசேரக் கூறினர்.

TikTok செயலி பிள்ளைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் கருத்துகளைப் பரப்புவதாகவும் சீனாவின் கம்யூனிசக் கட்சியுடன் அதற்குத் தொடர்புள்ளதாவும் அவர்கள் சாடினர்.

சீனாவைத் தளமாகக் கொண்டு செயல்படும் ByteDance நிறுவனத்துக்கும் செயலிக்கும் தொடர்புள்ளதா என்பது அதிகம் விசாரிக்கப்பட்டது.

சீனாவில் உள்ள ByteDance நிறுவன ஊழியர்களால் TikTok பயனீட்டாளர்களின் விவரங்களைப் பெற முடியும் என்று திரு. சியூ சொன்னார்.

இருப்பினும், அமெரிக்கப் பயனீட்டாளர்களின் தனிப்பட்ட விவரங்களை அமெரிக்காவிலேயே வைத்திருப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுவதாக அவர் கூறினார். 

TikTok நிறுவனத்தின் ஆகப் பெரிய சந்தை அமெரிக்காவில்தான் உள்ளது.

அங்கு மாதந்தோறும் சுமார் 150 மில்லியன் பேர் செயலியைப் பயன்படுத்துகின்றனர்.

ஆதாரம் : AGENCIES

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்