Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Tingle வகை மரங்களை எரிக்க வேண்டாம்: விஞ்ஞானிகள்

வாசிப்புநேரம் -

வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவில் (Western Australia) Tingle வகை மரங்கள் வளரும் பழங்கால வனப்பகுதியை எரிக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்யுமாறு அம்மாநில அரசாங்கத்திற்கு விஞ்ஞானிகள் அழைப்பு விடுத்துள்ளனர். 

அவ்விடத்திற்கு அருகே வாழும் சமூகங்களைக் காட்டுத்தீயில் இருந்து பாதுகாக்க அந்தத் திட்டத்தை மேற்கொள்வது அவசியம் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

உலகின் மிக உயரமான, பழைமையான மரங்கள் Tingle வகை மரங்கள். 

வெஸ்டர்ன் ஆஸ்திரேலியாவில் உள்ள வால்போல் (Walpole), நார்னலப் (Nornalup) ஆகிய இடங்களைச் சுற்றியுள்ள ஒரு சிறிய பகுதியில் மட்டுமே அவற்றைக் காணலாம். 

அங்கு சுற்றுலாப்பயணிகள் செல்வதுண்டு. 

400 ஆண்டுகள் பழமையான Tingle மரங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று தாவரவியலாளர்கள் வலியுறுத்துகின்றனர். 

முன்னதாக தீயினால் Tingle மரங்கள் வெட்டப்பட்டதற்கு எதிராகச் சமூக ஊடகங்களில் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அந்த வகை மரங்கள் நூற்றுக்கணக்கான ஆண்டுகள் பழைமையானது என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆண்டுதோறும் வனப்பகுதிகளை எரிக்கும் அரசாங்கத்தின் திட்டங்களை அகற்ற விஞ்ஞானிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

ஆனால் அத்தகைய நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர் அதிகாரிகள்.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்