Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம் trending

அரையாண்டுப் பருவத்தில் ஒருமுறை மட்டுமே கழிவறைக்குச் செல்லலாம்?

வாசிப்புநேரம் -
அரையாண்டுப் பருவத்தில் ஒருமுறை மட்டுமே கழிவறைக்குச் செல்லலாம்?

Unsplash

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

சீனாவின் குவாங்டோங் (Guangdong) மாநிலப் பள்ளியில் அறிமுகம் செய்யப்பட்ட ஒரு புதிய விதிமுறை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அரையாண்டுப் பருவத்தில் மாணவர்கள் ஒருமுறை மட்டுமே வகுப்புக்கு இடையே கழிவறைக்குச் செல்ல முடியும்.

சென்ற மாதம் நடந்த பள்ளி நிர்வாகக் கூட்டத்தில் அந்த விதி முன்வைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

அப்போது காட்டப்பட்ட விளக்கப்படத்தை
ஆசிரியர் ஒருவர் படம் எடுத்ததாகத் தெரிகிறது.

அவசரத் தேவைக்காக ஒரு மாணவர் ஒருமுறை மட்டும் வெளியே செல்லலாம்.

இரண்டாவது முறை சென்றால், பெற்றோர் பள்ளிக்கு வரவேண்டும் என்று விதியில் கூறப்பட்டுள்ளது.

மூன்றாவது முறை சென்றால் தண்டனை விதிக்கப்படும்.

ஆனால் தண்டனை என்ன என்பது குறிப்பிடப்படவில்லை.

வகுப்பறை ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கப் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டதாகப் பள்ளி கூறியது.

ஆனால் ஊடகங்கள் பள்ளியைத் தொடர்புகொண்டபோது புதிய விதிமுறை பற்றிய தகவல் வதந்தி என்று சொல்லப்பட்டது.

இந்நிலையில் விதிமுறை குறித்துப் புகார்கள் கிடைத்துள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவர்கள் விவகாரத்தை விசாரிக்கின்றனர்.

இணையவாசிகள் விதிமுறையை விமர்சிக்கின்றனர்.

மாணவர்களைவிட சிறைக்கைதிகளுக்கு அதிக சுதந்திரம் உண்டு என்று ஒருவர் பதிவிட்டார்.
ஆதாரம் : South China Morning Post

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்