Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

குடிநீர் இல்லாமல் சிரமப்படும் டோங்காவுக்கு உதவும் நாடுகள்

வாசிப்புநேரம் -

டோங்காவிற்கு (Tonga) இன்னும் கூடுதல் நிவாரண உதவி சென்றுசேர்ந்துள்ளது.

நியூஸிலந்தைச் சேர்ந்த கடற்படைக் கப்பலில், கால் மில்லியன் லிட்டர் அளவிலான குடிநீர் கொண்டுசேர்க்கப்பட்டுள்ளது.

டோங்காவில் எரிமலை வெடித்து சுனாமி ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்நாடு பெருமளவில் சேதமடைந்துள்ளது.

கடல் நீரிலிருந்து உப்பை அகற்றும் இயந்திரங்களையும் நியூஸிலந்து அனுப்பியுள்ளது.

சுனாமியால் டோங்கா தீவுகளில் உள்ள நீர்நிலைகள் பெரிய அளவில் மாசுபட்டன. அதைத் தொடர்ந்து, அங்கு குடிநீருக்குப் பற்றாக்குறை நிலவுகிறது.

பயிர்கள், கால்நடைகள், மீன் வளங்கள் ஆகியவை சேதமடைந்ததால், சுமார் 60 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரும் நாட்களில், அண்டை நாடுகளான ஆஸ்திரேலியாவும் நியூஸிலந்தும் இன்னும் கூடுதல் நிவாரண உதவியை வழங்கவிருக்கின்றன.

சீனா, குடிநீர், உணவு ஆகியவை உள்ளிட்ட அவசரகாலப் பொருள்களை நன்கொடையாக வழங்கியுள்ளது.

டோங்கா அரசாங்கம் நன்கொடைகளுக்கு நன்றி தெரிவித்தது.

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்