Skip to main content
விமானத்தில் அளவுக்கு அதிகமான இறைச்சி
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

விமானத்தில் அளவுக்கு அதிகமான இறைச்சி - விபத்துக்குள்ளாகி விமானி மாண்டார்

வாசிப்புநேரம் -
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

விமானத்தில் அளவுக்கு அதிகமான கடமான் (moose) இறைச்சி இருந்ததால் அது விபத்துக்குள்ளாகி விமானி மாண்டதாகத் தெரியவந்துள்ளது.

2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் யூஜீன் பெல்டோலா (Eugene Peltola) பறந்துகொண்டிருந்த விமானம் அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் விபத்துக்குள்ளானது.

அவரது சிறிய விமானத்தில் 225 கிலோகிராம் கடமான் இறைச்சி இருந்ததாக விசாரணையில் தெரியவந்தது.

அந்த விமானத்தில் அனுமதிக்கப்பட்டதைவிட அது சுமார் 45 கிலோகிராம் அதிகம்.

விமானத்தின் வலது இறக்கையில் மான் கொம்புகள் தொங்கவிடப்பட்டிருந்ததாக விசாரணை அறிக்கை குறிப்பிட்டது.

அது அலாஸ்காவில் வழக்கமான ஒன்று எனக் கூறப்பட்டது.

அதோடு காற்றும் அதிகமாக இருந்ததால் விமானம் விபத்துக்குள்ளானதாக அறிக்கை சொன்னது.

மாண்ட விமானி பெல்டோலா அமெரிக்காவின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மேரி பெல்டோலாவின் (Mary Peltola) கணவர்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்