கனடாவின் FIFA உலகக் கிண்ண ரசிகர் விழா ரத்து
வாசிப்புநேரம் -
படம்: Reuters
New: You can now listen to articles.
This audio is generated by an AI tool.
கனடாவின் டொரோண்ட்டோ (Toronto) நகரில் நடைபெறவிருந்த உலகக் கிண்ண ரசிகர் விழா மோசமான வானிலை காரணமாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
கனடாவின் முதல் ஆட்டத்திற்கு முந்தைய நாள் அனைத்துலகக் FIFA காற்பந்து ரசிகர் விழா நடைபெறவிருந்தது.
இடியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்பட்டது.
முன்னெச்சரிக்கையாக மக்களை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக விழாவின் ஏற்பாடாளர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்தனர்.
போட்டியின் தொடக்க ஆட்டத்தில் மெக்சிகோ தென்னாப்பிரிக்காவுடன் விளையாடுவதைப் பெரிய திரையில் ரசிகர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர்.
அதை அடுத்து வானிலை இடையூறு ஏற்பட்டது.
கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் கோடைகாலத்தில் நடைபெறும் போட்டிகள் நிலையற்ற வானிலையைச் சந்திக்கக்கூடிய தெளிவான அறிகுறிகள் இருப்பதாக விளையாட்டுத்துறை விஞ்ஞானிகள் முன்னுரைத்தனர்.
வழக்கத்தைவிட அதிக வெப்பநிலையை அமெரிக்காவின் பெரும் பகுதிகளில் எதிர்பார்க்கலாம் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

ஆதாரம் : Reuters