90 வயதில் 3 குஞ்சுகளுக்குத் தந்தையான ஆமை....

அமெரிக்காவின் ஹியூஸ்டன் (Houston) விலங்குத் தோட்டத்தில் 3 ஆமைக் குஞ்சுகளின் புதுவரவு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Radiated எனும் அந்த வகை ஆமைகள் அழிந்துபோகும் அபாயத்தை எதிர்நோக்குவதாக BBC செய்தி நிறுவனம் கூறியது.
அவற்றின் தந்தையோ 90 வயது திரு. பிக்கிள்ஸ் (Pickles).
அந்த ஆமையே விலங்குத் தோட்டத்தின் ஆக வயதான விலங்கு என்று BBC சொன்னது.
அது 1980களிலிருந்து அந்த விலங்குத் தோட்டத்தில் உள்ளது.
மடகாஸ்கரைச் சேர்ந்த அந்த வகை ஆமைகள் சட்டவிரோதமாய்ச் செல்லப் பிராணிகளாக விற்கப்படுகின்றன.
அதனால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
3 புதிய ஆமைக் குஞ்சுகளைச் சேர்த்து ஹியூஸ்டன் விலங்குத் தோட்டத்தில் radiated வகை ஆமைகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளது.