டாட்டன்ஹாம் மாபெரும் வெற்றி
(படம்: Andrew Milligan/PA via AP)
This audio is generated by an AI tool.
டாட்டன்ஹாம் ஹாட்ஸ்பர் UEFA ஐரோப்பா லீக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.
இன்று அதிகாலை நடைபெற்ற இறுதிச் சுற்று ஆட்டத்தில் அது மென்செஸ்ட்டர் யுனைட்டட் குழுவிற்கு எதிராகக் களமிறங்கியது.
ஸ்பெயினின் பில்பௌ (Bilbao) நகரில் உள்ள சென் மாமிஸ் (San Mames) அரங்கில் ஆட்டம் நடபெற்றது. இரு குழுக்களுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவியது.
இறுதியில் டாட்டன்ஹாம் ஒன்றுக்குப் பூஜ்யம் என்ற கோல் கணக்கில் வென்றது.
ஆட்டத்தின் 42ஆவது நிமிடத்தில் ஜான்சன் (Johnson) போட்ட கோல்
டாட்டன்ஹாம் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தது.
சுமார் 17 ஆண்டுக்குப் பிறகு அந்தக் குழு வென்றிருக்கும் முக்கிய வெற்றிக்கிண்ணம் இது.
1984ஆம் ஆண்டுக்குப் பிறகு குழு வென்றுள்ள முதல் ஐரோப்பியக் கிண்ணமும் இதுதான்.