Skip to main content
டாக்சி தாமதமாக வந்ததால் கோவா தீயில் தப்பிய சுற்றுப்பயணிகள்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

டாக்சி தாமதமாக வந்ததால் கோவா தீயில் தப்பிய சுற்றுப்பயணிகள்

வாசிப்புநேரம் -
டாக்சி தாமதமாக வந்ததால் கோவா தீயில் தப்பிய சுற்றுப்பயணிகள்
படம்: X/@thegoanonline
New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

இந்தியாவின் கோவா மாநில இரவு விடுதிக்குச் சென்ற சுற்றுப் பயணிகள் டாக்சி தாமதமாக வந்ததால் உயிர்தப்பினர்.

அந்தக் கதையை அவர்கள் பகிர்ந்து கொண்டனர்.

அந்தச் சுற்றுப்பயணிகள் புதுடில்லியில் இருந்து கோவா சென்றனர்.

இரவு விடுதிக்குச் செல்ல அவர்கள் திட்டமிட்டனர். ஆனால் டாக்சி தாமதமாக வந்தது.

அவர்கள் போய்ச் சேர்வதற்குள் இரவு விடுதியில் தீ மூண்டுவிட்டதாகப் பயணிகளில் ஒருவர் ANI ஊடகத்திடம் தெரிவித்தார்.

இரவு விடுதிக்கு அருகே சென்றபோது புகையைக் கண்டதாக அவர் விவரித்தார்.

அவருக்கும் அவர் நண்பர்களுக்கும் புகையைக் கண்டு குழப்பமாக இருந்ததையும் அவர் குறிப்பிட்டார். பின்னரே தீச்சம்பவம் ஏற்பட்டதை அவர்கள் அறிந்ததாக அவர் கூறினார்.

புதடில்லியைச் சேர்ந்த இன்னொரு பயணியும் தீயிலிருந்து தப்பியதாகத் தெரிவித்தார். விடுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இசை நிகழ்ச்சிக்குச் செல்ல அவர் திட்டமிட்டார்.

அவரும் பெருமளவு புகையைக் கண்டதைக் குறிப்பிட்டார்.

தீ எப்படி மூண்டது என்பதைக் கண்டறிய கோவா மாநில அரசாங்கம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
ஆதாரம் : Others

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்