புதுடில்லியில் காற்றுத் தூய்மைக்கேடு - தீபாவளியன்று நிலைமை மோசமாகலாம்
படம்: AFP/Sajjad Hussain
This audio is generated by an AI tool.
இந்தியத் தலைநகர் புதுடில்லியில் காற்றுத் தூய்மைக்கேடு கடுமையாக அதிகரித்துள்ளது.
உலகச் சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கும் தினசரி வரம்பைவிட அது 30 மடங்குக்கும் அதிகமாக உள்ளது.
காற்றுத் தூய்மைக்கேட்டைக் குறைக்கப் போக்குவரத்து, கட்டுமானப் பணிகள் ஆகியவற்றுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும், வரும் ஞாயிற்றுக்கிழமை தீபாவளியின்போது நிலைமை மேலும் மோசமடையக்கூடும்.
பட்டாசுகள் வெடிப்பதால் காற்றுத் தூய்மைக்கேடு அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குறைந்த புகையை வெளியிடும் பட்டாசுகளை மட்டும் குறிப்பிட்ட அளவில் பயன்படுத்த இந்திய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.