Skip to main content

விளம்பரம்

விளம்பரம்

உலகம்

Toyota நிறுவனத்தின் 9 மில்லியன் கார் தயாரிப்புத் திட்டம் நிறைவேறுமா ?

வாசிப்புநேரம் -

பிரபல கார் நிறுவனமான Toyota மார்ச் மாதத்திற்குள் 1 மில்லியன் கார்களை உற்பத்தி செய்யுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

வர்ததகரீதியாக இவ்வாண்டு 9 மில்லியன் கார்களை  உற்பத்தி செய்ய Toyota இலக்குக் கொண்டிருந்தது.

ஆனால் அந்த இலக்கைத் தொட வேண்டுமானால் அடுத்த இரண்டு மாதத்திற்குள் சுமார் 1 மில்லியன் கார்களை Toyota உற்பத்தி செய்ய வேண்டும். 

அடுத்த மாதம் மட்டும் உலக அளவில் சுமார் 700,000 வாகனங்களை உற்பத்தி செய்ய  Toyota எண்ணியுள்ளதாக Nikkei செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. 

COVID-19 நோய்த்தொற்றால் தென்கிழக்காசிய நாடுகள் பாதிக்கப்பட்டன

அதனால் அங்கிருந்து வரவேண்டிய வாகனப் பாகங்கள் குறைந்தன, அதனால் கார் தயாரிப்புப் பணிகளும் மெதுவடைந்தன.

9 மில்லியன் கார்களை  உற்பத்தி செய்ய முடியுமா முடியாதா என்பது குறித்து Toyota நிறுவனம் அதிகாரபூர்வமாக எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. 

- Reuters

விளம்பரம்

மேலும் செய்திகள் கட்டுரைகள்

விளம்பரம்