Skip to main content
மத்தியப் பிரதேசத்தில் தள்ளுவண்டி கவிழ்ந்ததில் 11 பேர் மரணம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மத்தியப் பிரதேசத்தில் தள்ளுவண்டி கவிழ்ந்ததில் 11 பேர் மரணம்

வாசிப்புநேரம் -
இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் சமயத் திருவிழாவுக்குச் சென்றுகொண்டிருந்த 11 பேர் விபத்துக்குள்ளாகி மாண்டனர்.

அவர்கள் பயணம் செய்த வாகனம் கவிழ்ந்து குளத்திற்குள் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

காண்ட்வா (Khandwa) நகரில் நடந்த சம்பவத்தில் மாண்டோரில் பிள்ளைகளும் அடங்குவர்.

மூவர் மீட்கப்பட்டனர்; அதில் ஒருவர் கடுமையாகக் காயமுற்றார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்,

அசம்பாவிதத்தில் உயிரிழந்தோரை எண்ணி ஆழ்ந்த கவலையடைவதாக அவர் கூறினார்.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்