மலேசியாவில் பெண் ஓட்டிய கார் மீது மரம் விழுந்தது
வாசிப்புநேரம் -

படம்: Envato Elements
மலேசியாவின் மலாக்காவில் பெண் ஒருவர் கார் ஓட்டிக்கொண்டிருந்தபோது பெரிய மரம் சரிந்து விழுந்தது.
நல்ல வேளை, அவர் தக்க நேரத்தில் காரை நிறுத்தியதால் உயிர்தப்பினார்.
சம்பவம் நேற்று (10 ஜூன்) பிற்பகல் சுமார் 1.30 மணிக்கு நடந்ததாக மலேசிய ஊடகங்கள் குறிப்பிட்டன.
சம்பவம் குறித்த காணொளி இணையத்தில் பகிரப்பட்டது.
அதில் மரம் கருநிறக் கார் ஒன்றின் மீது விழுவதைப் பார்க்கலாம். எவரும் காயமடையவில்லை என்று 8 World செய்தித்தளம் குறிப்பிட்டது.
மரம் நடுச்சாலையில் விழுந்து கிடந்ததால், போக்குவரத்துத் தற்காலிகமாகத் தடைப்பட்டது.

ஆதாரம் : Others/8world