ஜப்பானில் ஜாங்மி புயல் - 800 விமானப் பயணங்கள் ரத்து
REUTERS/Kim Kyung-Hoon
ஜப்பானில் வீசும் ஜாங்மி (Jangmi) புயலால் தலைநகர் தோக்கியோ உயர் விழிப்புநிலையில் உள்ளது.
சுமார் 800 உள்நாட்டு, அனைத்துலக விமானப் பயணங்கள் ரத்து செய்யப்பட்டன.
அதிக ஆபத்துள்ள பகுதிகளைவிட்டு வெளியேறும்படி அதிகாரிகள் கூடுதல் உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றனர்.
சில பகுதிகளுக்கு மின்சார விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது.
60,000 வீடுகளுக்கு மின்சாரம் இல்லை.
புயல் காற்று சற்று வலுவிழந்து மணிக்கு 95 கிலோமீட்டர் வேகத்தில் வீசுகிறது.
வடக்கு நோக்கிச் செல்லும் புயல் இன்று (3 ஜூன்) பின்னேரத்தில் தோக்கியோவை அடையும் என்று அஞ்சப்படுகிறது.
அடுத்த 24 மணி நேரத்தில் சில இடங்களில் 300 மில்லிமீட்டர் வரையிலான மழை பெய்யலாம் என்று முன்னுரைக்கப்பட்டது.
வெள்ளம், நிலச்சரிவுகள், பெரும் அலைகள் ஆகியவை ஏற்படும் அபாயம் அதிகரித்திருக்கிறது.