உலகம் trending
சாலையில் கொட்டிய கணவாய்கள்... துர்நாற்றத்தில் நகரம்!
John Mcnamara/Pierpicture via AP
This audio is generated by an AI tool.
அமெரிக்காவின் ரோட் (Rhode) தீவில் கணவாய்களை ஏற்றிச் சென்ற கனரக வாகனம் கவிழ்ந்ததில் எல்லாம் சாலையில் கொட்டியது.
நரகான்செட் (Narragansett) நகரில் சம்பவம் நடந்தது.
பதப்படுத்தும் நிலையத்திற்குக் கணவாய்களை ஏற்றிச் சென்ற வாகனம் வளைவில் திரும்பியபோது அதன் சரக்குப் பெட்டி கழன்று பக்கவாட்டில் கவிழ்ந்தது.
அதில் இருந்த கணவாய்களில் பெரும்பகுதி சாலையில் கொட்டியது.
காலை 9.27 மணியளவில் சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
ஆனால் சாலையைச் சுத்தம் செய்து போக்குவரத்துக்கு மீண்டும் திறக்க மாலை 5.15 மணி வரை ஆனது.
கோடைக்கால வெயிலில் கணவாய்கள் பல மணி நேரம் கிடந்ததால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசியதாகக் கூறப்பட்டது.
கனரக இயந்திரங்களும் சரக்கு வாகனமும் பயன்படுத்தப்பட்டு கணவாய்கள் அகற்றப்பட்டன.
வாகன ஓட்டுநரும் அவருடன் பயணம் செய்தவரும் காயமின்றித் தப்பினர்.
வேறு எந்த வாகனமும் சம்பவத்தில் சிக்கவில்லை.
சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.