இடைத்தவணைத் தேர்தல் தோல்விக்கு ஈரான் போரும் ஒரு காரணம்: டிரம்ப்
படம்: SAUL LOEB / AFP
This audio is generated by an AI tool.
அமெரிக்க இடைத்தவணைத் தேர்தலில் குடியரசுக் கட்சியின் தோல்விக்கு ஈரான் போரும் ஒரு காரணம் என்று அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.
இருப்பினும் இவ்வாண்டுத் தொடக்கத்தில் போரைத் தொடங்கியதற்காக வருந்தவில்லை என்று அவர் The Wall Street Journal ஊடகத்திடம் சொன்னார்.
அமெரிக்க இடைத் தவணைத் தேர்தலில் செனட் சபையையும் மக்களவையையும் ஜனநாயகக் கட்சி தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருக்கிறது.
பல்லாண்டாய்க் குடியரசுக் கட்சியின் வசமிருந்த மாநிலங்களை ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது.
விலைவாசி உயர்வும் ஈரான் போரும் வாக்காளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.
இடைத் தவணைத் தேர்தல் மூலம் அமெரிக்கர்கள் "போர் வேண்டாம்" என்று சொல்லியிருப்பதாக ஈரானிய நாடாளுமன்ற நாயகர் முகமது பாகர் கலிபாஃப் (Mohammad Bagher Ghalibaf) சொன்னார்.
அமெரிக்காவுடனான அமைதிப் பேச்சில் அவர் முக்கியப் பங்காற்றுகிறார்.
"மனசாட்சி அல்லது வாழ்க்கைச் செலவின உயர்வு காரணமாக அமெரிக்கர்கள் போர் வேண்டாம் என்று கூறியுள்ளனர். நாங்கள் அதை ஆதரிக்கிறோம்" என்றார் திரு கலிபாஃப்.