Skip to main content
அதிபர் டிரம்ப் மனமாற்றம்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அதிபர் டிரம்ப் மனமாற்றம்

வாசிப்புநேரம் -
அதிபர் டிரம்ப் மனமாற்றம்

படம்: AFP/Andrew Caballero-Reynolds

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் ஈரானுடன் பேசலாம் என்று கூறியிருக்கிறார்.

ஈரான் மீதான தாக்குதல்களை 2 வாரங்களுக்கு நிறுத்துவதாக அவர் அறிவித்தார்.

ஈரான் அனுப்பியுள்ள 10 அம்சத் திட்டம் நியாயமாக இருப்பதாகத் திரு டிரம்ப் சொன்னார். அது செயல்படுத்தக் கூடிய அமைதித் திட்டம்தான் என்றார் அவர்.

அந்த அமைதித் திட்டத்தை வைத்துப் பேச முடியும் என்று அவர் குறிப்பிட்டார்.

"ஈரான் மீது இரண்டு வாரங்களுக்கு தாக்குதல்களை நிறுத்திவைக்க நான் சம்மதிக்கிறேன்" என்று திரு டிரம்ப் தமது Truth Social சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது இரு தரப்பும் பின்பற்றவிருக்கும் சண்டை நிறுத்தம் என்றார் அவர்.

ஈரான் 10 அம்ச அமைதித் திட்டத்தை அமெரிக்காவிடம் சமர்ப்பித்துள்ளதாகவும் அதிபர் டிரம்ப் சொன்னார்.

பேச்சுவார்த்தையின் மூலம் சமரசம் எட்டப்படுவதற்கு இந்த இரண்டு வாரகாலம் பயன்படும் என்று திரு டிரம்ப் சொன்னார்.

முன்னதாக விவாதிக்கப்பட்ட பெரும்பாலான விவகாரங்களில் இணக்கம் எட்டப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இரண்டு வார கால அவகாசம், ஒப்பந்தத்தை உறுதி செய்யவும் முழுமைப்படுத்தவும் உதவும் என்று திரு டிரம்ப் கூறினார்.

ஆதாரம் : Reuters

மேலும் செய்திகள் கட்டுரைகள்