Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

மலேசிய இறக்குமதிகளுக்கான வரி விகிதத்தை டிரம்ப் நாளை அறிவிப்பார்: அன்வார்

வாசிப்புநேரம் -
மலேசிய இறக்குமதிகளுக்கான வரி விகிதத்தை டிரம்ப் நாளை அறிவிப்பார்: அன்வார்

Fazry Ismail/Pool via Reuters

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

மலேசிய இறக்குமதிகளுக்கான வரி விகிதத்தை அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் நாளை (1 ஆகஸ்ட்) அறிவிப்பார் என மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்துள்ளார்.

அது குறித்துத் திரு டிரம்ப்புடன் பேசியதை அவர் உறுதிப்படுத்தினார்.

திரு டிரம்ப் நாளை அறிவிக்கவிருக்கும் பொது வரி விகிதம் மலேசியப் பொருளாதாரத்திற்குச் சுமையாக இருக்காது என நம்புவதாகத் திரு அன்வார் கூறினார்.

அண்மையில் திரு அன்வார் கம்போடியாவுக்கும் தாய்லந்துக்கும் இடையே சமரசப் பேச்சுவார்த்தையை வழிநடத்தினார். இரு நாடுகளும் சண்டை நிறுத்தத்திற்கு இணங்கின.

அதனையடுத்துத் திரு அன்வார், அமெரிக்கா விதிக்கவிருக்கும் வரிகள் குறித்துப் பேசியிருக்கிறார்.

திரு டிரம்ப் அக்டோபரில் நடைபெறவிருக்கும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வார் என்றும் மலேசியப் பிரதமர் தெரிவித்தார்.
ஆதாரம் : CNA

Shorts

மேலும் செய்திகள் கட்டுரைகள்