Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

அமெரிக்க அதிபர் பைடனும் அடுத்த அதிபராகவிருக்கும் டிரம்ப்பும் விரைவில் சந்திப்பு

வாசிப்புநேரம் -
அமெரிக்க அதிபர் பைடனும் அடுத்த அதிபராகவிருக்கும் டிரம்ப்பும் விரைவில் சந்திப்பு

(படங்கள்: TANNEN MAURY and Brendan Smialowski / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் (Joe Biden), புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டோனல்ட் டிரம்ப்பும் (Donald Trump) வரும் புதன்கிழமை வெள்ளை மாளிகையில் சந்திக்கவிருக்கின்றனர்.

வழக்கமாகத் தேர்தலுக்குப் பிறகு தற்போதைய அதிபருக்கும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபருக்கும் இடையே  பாரம்பரியமாக நடைபெறும்  சந்திப்பு அது.

இடைக்காலத் திட்டங்களையும் வெள்ளை மாளிகை நிர்வாகத்தை அமைப்பதற்கான விவகாரங்கள் பற்றியும் தலைவர்கள் இருவரும் கலந்துபேசுவர். 

திரு டிரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்காவின் புதிய அதிபராகப் பொறுப்பேற்பார். 

அவர் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபர் பொறுப்பை ஏற்கவிருக்கிறார்.

திரு டிரம்ப் அவருடைய நிர்வாகக் குழுவினரைத் தேர்ந்தெடுக்கத் தொடங்கியிருக்கிறார்.

அவர் தேர்தல் பிரசார நிர்வாகியான சுசி வைல்ஸை (Susie Wiles) வெள்ளை மாளிகையின் தலைமை அதிகாரியாகத் தேர்ந்தெடுத்துள்ளார்.

திரு டிரம்ப் தம்முடைய ஆலோசகர் ஸ்காட் பேஸ்னெட்டை (Scott Bessnet) நிதியமைச்சராக அறிவிப்பார் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் மைக் பொம்ப்பேயோவையும் (Mike Pompeo) குடியரசுக் கட்சியின் அதிபர் வேட்பாளராக விருப்பம் தெரிவித்த நிக்கி ஹேலியையும் (Nikki Haley) நிர்வாகக் குழுவில் சேர்க்கப்போவதில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : AGENCIES

மேலும் செய்திகள் கட்டுரைகள்