Skip to main content
டிரம்ப்
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

டிரம்ப் - பைடன் சந்தித்தனர்

வாசிப்புநேரம் -
டிரம்ப் - பைடன் சந்தித்தனர்

(படம்: SAUL LOEB / AFP)

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

அமெரிக்காவின் அடுத்த அதிபராகவிருக்கும் திரு டோனல்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் அதிபர் ஜோ பைடனைச் சந்தித்துப் பேசியிருக்கிறார்.

அடுத்த அதிபராகவிருப்பவரும் தற்போதைய அதிபரும் சந்திப்பது நிர்வாக மாற்றத்தைக் குறிக்கும் நீண்ட கால வழக்கம்.

அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற திரு டிரம்ப்பைத் தம்மைச் சந்திக்க வரும்படி திரு பைடன் அழைப்பு விடுத்திருந்தார்.

சுமார் இரண்டு மணி நேரம் நீடித்த சந்திப்பில் நிர்வாக மாற்றம் சீராய் நடக்க இருவரும் உறுதியளித்தனர்.

தேசியப் பாதுகாப்பு, உள்நாட்டுக் கொள்கைகள் முதலியன குறித்தும் விவாதிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை கூறியது.

அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து விலகுவதற்கு முன் திரு பைடன், ஜூன் மாதம் நேரடி விவாதத்தின் போது திரு டிரம்ப்பைச் சந்தித்தார்.

2020ஆம் ஆண்டு திரு பைடன் தேர்தலில் வென்றபோது அவரை வெள்ளை மாளிகைக்கு அழைக்க அப்போது அதிபராக இருந்த திரு டிரம்ப் மறுத்து விட்டார்.

அந்தத் தேர்தலில் தாம் தோற்கவில்லை என்று அப்போது திரு டிரம்ப் கூறிவந்தார்.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்