Skip to main content
சீனா
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

சீனா-அமெரிக்கா 'சோயா பீன்' பகை

வாசிப்புநேரம் -
அமெரிக்காவிடமிருந்து சீனா சோயா பீன்கள் வாங்குவதை நிறுத்திக்கொண்டது பொருளாதார ரீதியான பகைமைச் செயல் என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

சீனாவிலிருந்து சமையல் எண்ணெய் இறக்குமதிக்குத் தடை விதிக்கப்போவதாக அவர் மிரட்டுகிறார்.

சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகப் பூசல் முடிவதாகத் தெரியவில்லை.

சீனா வேண்டுமென்றே எடுக்கும் நடவடிக்கைக்குப் பதிலடி கொடுக்கப்படும் என்று திரு டிரம்ப் சொன்னார்.

சீனாவின் செயல் அமெரிக்க விவசாயிகளுக்குப் பெரும் சவாலாய் அமையக்கூடும் என்றார் அவர்.

பதிலடி நடவடிக்கைகளில் கூடுதலான வர்த்தக அம்சங்களைச் சேர்ப்பது பற்றி வாஷிங்டன் பரிசீலிப்பதாய் அவர் தெரிவித்தார்.

சென்ற ஆண்டு சீனா அமெரிக்காவிடமிருந்து கிட்டத்தட்ட 13 பில்லியன் வெள்ளி மதிப்புள்ள சோயா பீன்களை வாங்கியது.

ஆனால் இவ்வாண்டின் முதல் பாதியில் விற்பனை சுமார் 40 விழுக்காடு சரிந்தது.

அமெரிக்காவுக்குப் பதிலாக சீனா பிரேஸிலிலிருந்தும் அர்ஜெண்டினாவிலிருந்தும் சோயா பீன்களை இறக்குமதி செய்யத் தொடங்கியுள்ளது.
ஆதாரம் : Others

மேலும் செய்திகள் கட்டுரைகள்