Skip to main content

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப் போவதில்லை என்ற இந்தியாவின் முடிவு நல்லது" - அதிபர் டிரம்ப்

வாசிப்புநேரம் -
"ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப் போவதில்லை என்ற இந்தியாவின் முடிவு நல்லது" - அதிபர் டிரம்ப்

படம்: REUTERS/Jonathan Ernst

New: You can now listen to articles.

This audio is generated by an AI tool.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யப் போவதில்லை என்று இந்தியா முடிவெடுத்திருப்பது நல்ல நடவடிக்கை என்று அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

தாம் கேள்விப்பட்ட அந்தத் தகவல் சரிதானா என்று தெரியவில்லை; நடப்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம் என்றார் திரு டிரம்ப்.

இந்தியாவுக்கு 25 விழுக்காட்டு வரி விதித்த அமெரிக்கா, ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதால் இந்தியாவுக்கு அபராதமும் விதிக்கப்படும் என்றும் கூறியிருந்தது.

அனைத்துலகச் சந்தையில் எண்ணெய் விலை, உலகளாவிய சூழல் ஆகியவற்றுக்கு ஏற்ப அவ்வப்போது முடிவெடுக்கப்படுவதாக இந்திய வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் (Randhir Jaiswal) கூறினார்.

இந்திய நிறுவனங்கள் ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தியுள்ளனவா என்பது பற்றித் தமக்குத் தெரியாது என்றார் அவர்.
 

மேலும் செய்திகள் கட்டுரைகள்