ஈரானுடன் உடன்பாடு செய்துகொள்ள முடியும்: டிரம்ப்
This audio is generated by an AI tool.
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) ஈரானுடன் உடன்பாடு செய்துகொள்ள முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை குறித்து அச்சுறுத்தும் வேளையில் அவர் அவ்வாறு சொன்னார்.
முன்னதாக, ஈரான் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேய்னி (Ayatollah Ali Khameini), அமெரிக்கா தாக்குதல் நடத்தினால் அது வட்டார அளவிலான போராக உருவெடுக்கும் என்று எச்சரித்தார்.
ஈரான் எந்தவொரு நாட்டையும் தாக்க விரும்பவில்லை. யாரேனும் தாக்குதல் நடத்தினால் மிகக் கடுமையான பதிலடி கொடுக்கப்படும் என்று அவர் சூளுரைத்துள்ளார்.
உலக எண்ணெய்ப் பரிவர்த்தனையில் ஐந்தில் ஒரு பங்கு ஹோர்முஸ் (Hormuz) நீரிணையில் நடக்கிறது.
அங்கு ஈரானியப் படை இரண்டு நாள் பயிற்சி நடத்தியிருக்கிறது.