Skip to main content
"தினமும் ஒரு நிமிடம் உடற்பயிற்சி செய்வேன்"
சுலபம்
நடுத்தரம்
கடினம்
முந்தைய புதிர்கள்

[GE-2025] Hide header/footer for GE mobile webview

உலகம்

"தினமும் ஒரு நிமிடம் உடற்பயிற்சி செய்வேன்" - அதிபர் டிரம்ப்

வாசிப்புநேரம் -
அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump), தாம் தினமும் அதிகபட்சம் ஒரு நிமிடம் உடற்பயிற்சி செய்வதாகத் தெரிவித்துள்ளார்.

பிள்ளைகளுக்கான அதிபர் உடலுறுதி விருதை (Presidential Fitness Test) மீண்டும் அறிமுகம் செய்வதற்கான நிர்வாக ஆணையில் கையெழுத்திடும்போது அவர் அவ்வாறு கூறினார்.

அதிபர் டிரம்ப் தாம் உடற்பயிற்சி செய்யாதது குறித்துச் சுகாதார அமைச்சர் ராபர்ட் கென்னடி ஜூனியரிடம் (Robert F. Kennedy Jr) கிண்டலாகப் பேசினார்.

அமெரிக்காவில் அதிபர் பதவிக்கு வந்த ஆக வயதானவர் திரு டிரம்ப்.

அவருக்கு அடுத்த மாதம் (ஜூன்) 80 வயதாகும்.

அவரது உடல்நலம் குறித்து ஊகங்கள் பரவியிருக்கின்றன.

அவரது கைகளில் தென்பட்ட காயங்கள், கால்களில் வீக்கம் தொடர்பில் முன்பு கேள்விகள் எழுப்பப்பட்டன.

நரம்பில் உள்ள பிரச்சினையால் கால் வீங்கியதாகவும் aspirin மருந்தை உட்கொள்வதால் கைகளில் காயங்கள் ஏற்பட்டதாகவும் வெள்ளை மாளிகை விளக்கம் அளித்திருந்தது.
ஆதாரம் : AFP

மேலும் செய்திகள் கட்டுரைகள்